tamil
சுற்றும் பூமி சுற்றாதே!
பிறந்த மனிதன்
சுடலையில் எரிகின்றான்
கறந்த பால்
கால் மணியில் திரள்கிறது
மறைந்த மனைவி
மாதத்தில் மறந்து போகிறாள்
திறந்த கடைகள்
வருடத்தில் மூடப்படுகின்றன.
மாற்றம் என்பது இதுதான்!
மாற்றத்தின் அர்த்தத்தை தவிர
மற்றதெல்லாம் மாறும்!
ஆற்றலின் அழிவின்மை போல...
சுற்றும் பூமியின் நிரந்தர சின்னம்!
காலி மைதானம்
கடைத்தொகுதியாவதும்
அறுபதுகள் கூடும் அரசடி
மண்ணிலா இந்த ஆலயங்கள் ? (Are these temples on the land?)
வடக்கே வல்லிபுரம், வண்ணை வைத்தீஸ்வரம்
குடம் குடமாய் பால் இறையும் நல்லூர்கந்தன்
கடல் நீரில் கானல் விளக்கெரிக்கும் வட்டாப்பளை
படகேறி பயணித்து பாவம் போக்கும் மணி பல்லவம்.
தினம் ஆறு தடவை
குட்டியன் வந்து
குந்து மீது ஏறி மணியடிக்க
அண்டை வீட்டு
அம்பலத்தான் ஆலவட்டம் பிடிக்க
முந்தநாள் முதிர் மலர் சொரிய
தொந்தி விநாயகருக்கு
பொந்து தேன் பலகாரம் படைக்க
குழந்தைகள் ஊர்முழுக்க
உணவின்றி இருக்க
செம்பு பால் நீராய் இறைய
வந்து ஐயர் மந்திரம் ஒலிக்க
மொந்தை கள்ளு
முகத்தில் வழிய
கந்தர் வந்து கனகதை கதைக்க
அண்டை நாட்டு தேர்தலும்
