This is the personal website of Garthee, who believes it is the perspiration not the perception that brings the success

Search:     All roads lead to ROME !  

Be Miracle!

மண்ணிலா இந்த ஆலயங்கள் ? (Are these temples on the land?)

வடக்கே வல்லிபுரம், வண்ணை வைத்தீஸ்வரம்
குடம் குடமாய் பால் இறையும் நல்லூர்கந்தன்
கடல் நீரில் கானல் விளக்கெரிக்கும் வட்டாப்பளை
படகேறி பயணித்து பாவம் போக்கும் மணி பல்லவம்.

சிவராத்திரிக்கு, சிறகுகள் புனல்பருகிடும் பாலாவி நீர்
தவிக்கின்றோரும் துன்பத்தில் அமிழ்ந்தி துடிப்போரும்
பாவம் போக்கும், பனையும் பசும்முகிலும் சூழ்
மாவிட்டபுரம் என்றும் மண்மணம் வீசும்

கிழக்கே கீழ்வானில் சூரியன் உதிக்கும் கனவுகள் மலர் காலைப் பொழுதினில்
முழங்கும் மேளங்களும் நாதஸ்வர முழக்கங்களும்
புழங்கும் கொக்கட்டிச்சோலை, மந்தர் துயர்
அழிக்கும் மாமாங்கம்

தென்னை முக்கோணத்தில் மூர்த்தி தலம் தீர்த்தம் தலவிருட்சம்
அன்னை வடிவாம்பிகை சமேத முன்னை நாதர், முயல்வோருக்கும்
தன்னை அர்ப்பணிப்போருக்கும் தன்னருள் பாலிப்பார்
புன்னை மரம் நாப்ப புகழ்த்தலம் ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரம்

அருள் அதிகம் விளங்கும் ஈழம், ஆலயங்களும் அதிகம், ஆனால்
இருள் அதிகம் மக்கள் மனதில், துன்பக்
கருள் பரவ மாந்தர் தன்னுயிர் இழந்து
பொருள் துறந்து துயருறக் காரணம்,

புத்த தர்மம் ஓங்கி ஒலிக்கும் புண்ணிய பூமியில்
துட்டம் துரோதம் கொண்டு மக்கள் மனித நேயம் அற்று
குற்றம் கொலை, குண்டு மாரி பட்டி தொட்டி எங்கும் பொழிய‌
இரத்த ஆறு வெள்ளை துணிகளை நனைக்க காவி உடைகள் அதிகமாகின்றதே

PS>The poem talks about the holistic special Hindu shrines in Sri Lanka and their importance and mightiness. I used to search for rationalism in Religion, however, I now understand whether it is right or wrong doesn't matter, what it does and what it means to the people matter.

 

Comment viewing options

Select your preferred way to display the comments and click "Save settings" to activate your changes.

Its true. But not only for

Its true. But not only for this country.every where middle east india pakistan china etc. Like these if we take western countries also they are the people talk abt humanity, anti animal killing. but doing all sorts of rubbish against humanity( middle east) and killing somany animals.what to do?

Well the subject was different

The subject of the poem meant to justify the background of hindu devots

Are we owning what we owned ?

For more than a million people in Sri Lanka it is their life and these HOLY TEMPLES are the identity, which we are losing, mainly due to the war. Perhaps we are not much concerned as others - Buddhists about preserving the culture and the historically important and holistic temples, shrines and locations.

Sadly out of five the most venerable (or the seven if two others mentioned here are taken into the account), and historically profound shrines, five, except for two in the southern part of the country, are in the troubled area with no means for preservation or renovation.

Tumble Logs

Tumble logs