This is the personal website of Garthee, who believes it is the perspiration not the perception that brings the success

Search:     All roads lead to ROME !  

Be Miracle!

தினம் ஆறு தடவை

குட்டியன் வந்து
குந்து மீது ஏறி மணியடிக்க
அண்டை வீட்டு
அம்பலத்தான் ஆலவட்டம் பிடிக்க‌
முந்தநாள் முதிர் மலர் சொரிய‌
தொந்தி விநாயகருக்கு
பொந்து தேன் பலகாரம் படைக்க‌
குழந்தைகள் ஊர்முழுக்க
உணவின்றி இருக்க‌
செம்பு பால் நீராய் இறைய‌
வந்து ஐயர் மந்திரம் ஒலிக்க‌
மொந்தை கள்ளு
முகத்தில் வழிய‌
கந்தர் வந்து கனகதை கதைக்க‌
அண்டை நாட்டு தேர்தலும்
அடுத்த வீட்டு மோதலும்
அழகு ராணிப் போட்டியும்
அங்கு எதிரொலிக்க‌
'அண்ணை சுகமோ ?'
'பண்ணையார் மகளுக்கு கல்யானமே ?'
'சொல்லவே இல்லையே ?'
'செல்வத்தை கன நாளா காணவில்லையே ?'
'கனடாவிற்கு போயிட்டானோ ?'
மெல்ல கதை சூடு பிடிக்க‌
சொந்த பந்தம் கூடிக்குலாவிட‌
சந்திக்கடை சங்கடத்தார் வந்து சுண்டல்
கொடுக்க மந்தியினம் முந்திவிட‌
மனித நேயம் மறைந்திட‌
அந்திப்பூசை அரங்கேறும் ‍‍‍, தினம்
ஆறு வேளை தவறாது நடைபெறும்
அர்த்தமுள்ள இந்து மதம்
இதில் தொனித்திடும்

PS > Wrote on my transition from devot to agnostism, it clearly reflected in the context, however I am proud to be a HINDU !

 

Comment viewing options

Select your preferred way to display the comments and click "Save settings" to activate your changes.

last two lines bit confusing

last two lines bit confusing

It is supposed to mean

How mistakenly we attribute the failures of the society on religion instead of looking into its meaning, while we are indulged with the cosmetics of the religion

Gartheeban Ganeshapillai
----------------------------------------------------------------------

Department of Electronics and Telecommunication
University Of Moratuwa

Motorola INC
Sri Lanka

Tumble Logs

Tumble logs